மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி லவராணி அன்ரனி அவர்கள் 10.12.2022. அன்று திருக்குடும்ப கன்னியர் சபையில் தனது துறவற வாழ்வின் நித்திய வாக்குத்தத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நன்னாளில் அருட்சகோதரி லவராணி, இவருடன் இணைந்து அர்ப்பணத்தை மேற்கொண்ட அருட்சகோதரி இருவருக்கும் இறைவன் அளித்த இகபர நன்மைகளுக்கெல்லாம் நன்றி கூறி, தொடர்ந்தும் இறைபணியாற்றிட வேண்டிய வரங்களை இறைவன் அளித்தருள வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.