மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அமரர் நீக்கிலாப்பிள்ளை அன்ரனி (அகில இலங்கை சமாதான நீதவான்)
யாழ். மண்டைதீவு ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கதீற்றல் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நீக்கிலாப்பிள்ளை அன்ரனி அவர்கள் 05.04.2022 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அன்னார் றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
மரியதாஸ், லூர்து அற்றன்ஸ், சூசைதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியதாஸ் டயானா (ஆசிரியர், மண்டைதீவு றோ.க. பாடசாலை), ஆன் சோபனா (டெனா) - லண்டன், தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயராஜ் (ஆசிரியர், யாழ். சென்ற். பெனடிற்), எட்வின், சந்திரராஜா-லண்டன், ரஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக் ஷயன், கஷோன், அரோன், திஷான் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.