``You must love your neighbour as yourself``
(Mathew 22:39)
படங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.
செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் - 01.08.2019
அனைவருக்கும் புனித பேதுருவானவர் திருநாள் திருவிழா நல் வாழ்த்துக்கள்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் பெருவிழாவின் இறுதி நாள் வழிபாடுகளை senthamizhan studio என்ற இணயத்தளத்தில் நேரடியாகவும், பார்வையிடலாம்.
அனைவருக்கும் எமது பாதுகாவலனாம் புனித பேதுருவானவரின் திருநாள் நல் வாழ்த்துக்களும்,125ம் ஆண்டு ஆலய ஜூபிலி வாழ்த்துக்களும்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய ஜூபிலி பெருவிழா திருப்பலிபை தலைமையேற்று சிறப்பித்த யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கட்கு எம் மனமார்ந்த நன்றிகள். எம் ஆலய பங்குத் தந்தை அருட்பணி டேவிட் மனுவேல்பிள்ளை அடிகளார், பெருவிழா ஆயத்த வழிபாடுகளைச் சிறப்பித்த அருட்தந்தையர்கள், சல்வற்றோரியன் சபை கன்னியாஸ்திரிகள், எம்மண்ணின் குருக்கள், கன்னியாஸ்திரிகள், குருமட மாணவர்கள், ஜுபிலி விழா குழுவினர், பாடகர் குழாம், பீடப்பணியார், அருட்பணி சபையினர், பங்கு மக்கள், மற்றும் ஜுபிலி விழா இனிதே நிறைவேற முன்னின்று உழைத்த யாவர்க்கும் எமது நன்றிகளும், ஜுபிலி விழா நல் வாழ்த்துகளும் உரித்தாகுக!
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி லவராணி அன்ரனி அவர்கள் 10.12.2022. அன்று திருக்குடும்ப கன்னியர் சபையில் தனது துறவற வாழ்வின் நித்திய வாக்குத்தத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நன்னாளில் அருட்சகோதரி லவராணி, இவருடன் இணைந்து அர்ப்பணத்தை மேற்கொண்ட அருட்சகோதரி இருவருக்கும் இறைவன் அளித்த இகபர நன்மைகளுக்கெல்லாம் நன்றி கூறி, தொடர்ந்தும் இறைபணியாற்றிட வேண்டிய வரங்களை இறைவன் அளித்தருள வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.