சம்பேதுருவானவர் பேரில் பாடல்
பல்லவி
அருமை நேச பிரிய ஞான
குரவரான முனிவராம்
அரிய தந்தை தூய சம்பேதுரு
அனுதினமும் வாழ்கவே
சரணம்
பாலரை நாடி ஊர் ஊரராய் ஏறி
பாவமய லகற்றி வந்தீர்
பாதகனான பாவி போலானீர்
வையக மீதில் தேவனுக்காய்
பொன் மணி குவியல் புவியிடை வெறுத்து
ஞான நல் வேதங்க ளுரைத்தீர்
துன்பம் பிணிகள் சோகம் தீர்த்து
நன்மைகள் செய்தீர் இவ்வுலகில்
நேச தூயன் தாசர் காவலன்
ஆசீ ரருளி ஆதரிப்பீர்
நேசம் சேரும் உந்தன் மோட்சமத்தில்
தாசர் எங்களைச் சேர்த்திடுவீர்.
Home
OB Notice Nekilapillai Antony
News and Events
Prayers
Sacraments
November Pray for all souls
Novena to St Peter
Guestbook
Acknowledgement
Contact
Lent - தவக்காலம்
About Us
Songs
Announcements *
Announcements
Live Telecast
Gallery 3