மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய பங்கைச் சேர்ந்த திரு., திருமதி இராசையா ஜோன்மேரி தம்பதிகளின் புதல்வி மேரி றொஷானி அவர்கள் 22.04.2020அன்று தலுவகொட்டுவ, கொச்சிக்கடை, நீர்கொழும்பில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண நிலையத்தில் அருட்சகோதரியாக நித்திய வாக்குத்தத்தம் பெற்றுக்கொண்டார். அருட்சகோதரி மேரி றொஷானி அவர்களுக்கும், மற்றும் அருட்சகோதரிகளுக்கும் எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இவர்களுக்கு வேண்டிய ஆன்ம உள வளங்களை இறைவன் அளித்தருள வேண்டுமென்றும் வேண்டுகின்றோம். அருட்சகோதரி மேரி றொஷானி ஜோன்மேரி அவர்களின் நித்திய வாக்குத்தத்தம் பெற்ற நிழற் படங்களின் தொகுப்பு.