யாழ். மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழாவும், புலமைப்பரிசில் மாணவர் மற்றும் வகுப்பில் முதல் மூன்று நிலைகள் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், சுரக்ஷா காப்புறுதி திட்ட அறிமுகமும்
mandaitivu stp cc email
Save
யாழ். மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழாவும், 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் மற்றும் வகுப்பில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், கல்வி அமைச்சினால் இன்றிலிருந்து நடைமுறைக்குவரும் 05 – 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்கும் ரூபா 500,000.00 பெறுமதியான பிரதிலாபத்துடன் கூடிய முழுமையான “சுரக்ஷா” காப்புறுதித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று (07.12.2017) வித்தியாலய அதிபர் திரு. யோண் கொலின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலக செயலாளர் திரு. A. சோதிநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் மற்றும் வேலணை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மண்டைதீவு – அல்லைப்பிட்டி காவல்துறை பொறுப்பதிகாரி திரு. விவேகானந்தன், J/07,08 கிராம உத்தியோகத்தர் சசிக்காந், J/09 கிராம உத்தியோகத்தர் உதயராஜ் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான் திருமதி. அமிர்தநாதர் தங்கராணி, புனித பேதுருவானவர் ஆலய அருட்பணி சபை பொருளாளர் திரு. கலிஸ்ரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, முறையே மங்கலவிளக்கேற்றல், தேசியக்கொடியேற்றல், பாலன் குடிலுக்கு ஒளியேற்றல், இறைவணக்கம் என்பவற்றுடன், ஆசிரியர் திருமதி றோஸ்மலர் அவர்களின் வரவேற்புரையினையும், தலைமையுரையினையும் தொடர்ந்து வேலணை பிரதேச செயலக செயலாளர் திரு. A. சோதிநாதன் அவர்கள் பாடசாலை மாணவன் ஒருவரிடம், பெற்றோர் ஒருவரிடம் மாணவர்களுக்கான “சுரக்ஷா” காப்புறுதித் திட்ட கைநூலை வழங்கி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரின் ஆசியுரையினைத் தொடர்ந்து, மாணவிகளின் வரவேற்பு நடனம், மாணவர்களின் கலை நிகழ்வுகள், பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் என்பனவும் நடைபெற்றன.

வருடா வருடம் பாடசாலையில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் முதல் மூன்று நிலையில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 1000.00 ரூபா (ஆயிரம்) வீதம் 15 மாணவர்களுக்கும் 15,000.00 ரூபாவை (பதினைந்தாயிம்) பாடசாலையின் பழைய மாணவரும், முன்னை நாள் ஆசிரியருமாகிய அமரர் செபஸ்ரி தேவதாசன் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் நினைவாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது துணைவியார் திருமதி தேவதாசன் மேரிறீற்ரா அவர்கள் வழங்கி வந்தார். இவ்வருடம் பாடசாலை இரண்டாம் தர பாடசாலையாக தரம் உயர்ந்த நிலையில் தரம் 6 வகுப்பில் கல்வி பயிலும் மேலும் மூன்று மாணவர்களுக்குமாக 18,000.00 ரூபாவினை (பதினெட்டாயிரம்) வழங்கியுள்ளார். மேலும் வருடா வருடம் வழங்குவது போல இவ்வருடமும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 162 புள்ளிகளைப் பெற்ற மாணவன் அஞ்சிநிலவனுக்கு 5000.00 ரூபாவினை (ஐயாயிரம்) கனடாவில் வசிக்கும் திரு. தேவசகாயம்பிள்ளை யோகநாதன் அவர்களும், அப்பியாசக் கொப்பிகளை றொசான் கேபிள் உரிமையாளர் அவர்களும், ஏனைய போட்டிகளில் வலயம், கோட்டம், மாகாணம் மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களுக்காக 5000.00 ரூபாவை (ஐயாயிரம்) புனித பேதுருவானவர் கல்விக்குழுவும் வழங்கி இந்த மாணவர்களைக் கௌரவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் கல்வி வளர்ச்சியில் அக்கறைகொண்டு கல்விக்காக பல வழிகளில் எம் பாடசாலைக்கு உதவிபுரியும் அனைவருக்கும் எமது நன்றிகள்.

நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.


MRCTMS Oli vilaa 41
MRCTMS Oli vilaa 39
MRCTMS Oli vilaa 42
MRCTMS Oli vilaa 43
MRCTMS Oli vilaa 2
3MRCTMS Oli vilaa 3
MRCTMS Oli vilaa 12
MRCTMS Oli vilaa 14
MRCTMS Oli vilaa 15
MRCTMS Oli vilaa 16
MRCTMS Oli vilaa 17
MRCTMS Oli vilaa 18
25
34
48
73
MRCTMS Oli vilaa 9
MRCTMS Oli vilaa 47
MRCTMS Oli vilaa 65
MRCTMS Oli vilaa 67
MRCTMS Oli vilaa 70
MRCTMS Oli vilaa 72
MRCTMS Oli vilaa 71
MRCTMS Oli vilaa 75
76
MRCTMS Oli vilaa 77
MRCTMS Oli vilaa 78
MRCTMS Oli vilaa 79
MRCTMS Oli vilaa 8