Please feel free to sign our guest book, your feedback matters

Save
Save

Save
Save
Save
Save
Save
Save
Save
Save
Save
Save
Save

Save
Save
Save
Save
Save
Save
Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
mandaitivu stp cc email
செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் -திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
Silver Jubilee Celebration of Rev.Sister Mary Verjini Pethuruppillai
Announcements
`
எம் அன்பான இணையத்தள வாசகர்களே! .......
மேலும்
படங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.
    மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா-2016
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா இன்று (23/07/2016) மாலை 05:30மணிக்கு செபமாலையைத் தொடர்ந்து கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
ஆயத்தத நாள் வழிபாடுகளின் ஒழுங்கு முறைகள்.
01ஆம் நாள் 23/07/2016(சனி) புளியடி
02ஆம் நாள் 24/07/2016(ஞாயிறு) வழமை போன்று
03ஆம் நாள் 25/07/2016(திங்கள்) மடந்தவான் பிட்டி
04ஆம் நாள் 26/07/2016(செவ்வாய்) வடக்குக் கொண்டகம்
05ஆம் நாள் 27/07/2016(புதன்) கோவில்பிட்டி
06ஆம் நாள் 28/07/2016(வியாழன்) தெற்கு கொண்டகம்
07ஆம் நாள்29/07/2016 (வெள்ளி) ஆவரங்காடு
08ஆம் நாள் 30/07/2016(சனி) ஊடுத்தெரு
09ஆம் நாள் 31/07/2016(ஞாயிறு) பொது
10ஆம் நாள் 01/07/2016(திங்கள்)
24/07/2016(ஞயிறு) காலை 6:30 மணிக்கு முதல் நன்மைத் திருப்பலி.
01/08/2016(திங்கள்) திருநாள் திருப்பலி காலை 07:00 மணி
புனிதரின் திருச் சுருபப்பவனி மாலை 05:45 மணி
புனிதரின் பரிந்துரையும் இறை ஆசீயும் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
புனிதரின் வருடாந்த பெருவிழாவின் வழிபாடுகள் அனைத்தும்www.mandaitivustpeter.com இணையத்தளமூடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயம்.
பங்குத்தந்தையும்,
பங்குமக்களும்.

மண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் இறுதி நாளின் நற்கருணை வழிபாடு மற்றும் 01.08.2016 (திங்கள்) அன்று காலை நடைபெற்ற புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலி, மாலை நடைபெற்ற புனிதரின் திருச் சுருபப்பவனி போன்றவற்றின் நிழற்படங்கள்.
                          பங்கு மக்கள் அனைவருக்கும் எமது புனிதரின் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
பங்கின் வளர்ச்சிக்கான சங்கமம்
இடம்:-அனுஷா மண்டபம், மண்டைதீவு
காலம்:-02/08/2016
நேரம்:-இரவு 7:00மணி
போரினால் நலிவுற்று போரின் வடுக்களைத் தாங்கியிருக்கும் எமது பங்கின் மீழெழுச்சி தொடர்பாகவும்.வளர்ச்சி தொடர்பாகவும் பங்கின் அபிவிருத்தியில் அக்கறையுடைய அமைப்புக்களின் முக்கிய உறுப்பினர்கள் ஆர்வலர்களுடன் தற்பொழுது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வருகைதந்திருக்கும் பங்கு மக்களுடன் இணைந்து கலந்துரையாடவுள்ளார்கள் இந் நிகழ்வினை நேரடி ஒலிபரப்பாக www.mandaitivustpeter.com என்ற இணையத்தளமூடாக அனைவரும் பார்வையிடலாம்.
தகவல்: SPYC

மரண அறிவித்தல்
                      திருமதி கிறிஸ் ரீன் அஞ்சலா தர்மசீலன்

மட்டக்குழி - கொழும்பை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கிறிஸ்ரின் அஞ்சலா தர்மசீலன் அவர்கள் 12.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும்......
மரண அறிவித்தல்
செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன்
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள் 19.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும்......
மறைந்த திரு சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை
அழுத்தவும் www.mandaitivustpeter.com
                                                                மரண அறிவித்தல்
                                                         திரு சலமோன் பாவிலுப்பிள்ளை


யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

CANONIZATION OF MOTHER TERESA
SEPTEMBER 4, 2016
IN ROME.

புனித அன்னை திரேசா
"We are thankful, for our food, and our many blessings,
thank you Lord"
Wishing you all a blessed Thanksgiving!
                                                                                                           Posted on October 10,2016
Save
2016 ஆம் ஆண்டிற்கான குரு பிரதிபா பிரபா விருதினை மண்டைதீவு றோ.கத்தோலிக்க ஆசிரியை திருமதி கபிலராணி வசீகரன் அவர்கள் இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தேசத்தின் சிறார்களை எதிர்காலச் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தேவையான நிபுணத்துவம் மிக்க பரிபூரண நற்பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க ஆசிரியர்கள் மேற்கொண்ட சேவையினைக் கௌரவிக்கும் வகையில் வருடாவருடம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதினை திருமதி கபிலராணி வசீகரன் அவர்கள் 05.10.2016 அன்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் பணி மென்மேலும் சிறக்கவும், இது போன்ற பல உயர்ந்த விருதுகளைப் பெறவும் எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் அருள்வேண்டி மனமார பாராட்டி வாழ்த்துகின்றோம்

We wish Mrs Kapilarani Vaseekaran Hearty Congratulations and all the best for the Guru Piratheepa Pirapa award.
May God continue to sustain you with His Grace, Guide and protect you on this journey, And grant you many blessings.

நானிலம் போற்றிட நற்பணியாற்றி
நாற்பத்தி எட்டாண்டு நிறைவு காணும்
நற்குருவே!
உம்பணி மென்மேலும் விரிவடைந்து தொடர
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
அனைத்துப் புனிதர்கள் பெருவிழா
All Saints' Day
இறைபணியில் தனது ஒன்பதாவது ஆண்டு நிறைவு காணும் அருட்தந்தை அகஸ்டீன் றொபின் கொன்பியூசியஸ் அடிகளார் அவர்கள் பணி மென்மேலும் சிறப்புற வேண்டிய வளங்களை இறைவன் அளித்தருள வேண்டி வாழ்த்துகின்றோம்.
Dear Rev.Fr.Augustine Confucious Celebrating with you on your 9th Anniversary of your Ordination. May the Lord bless you as you follow in His way. May you find joy and peace as He inspired you each day.

03.12.2016

Congratulations Rev.Fr. A.P.Anthonipillai on your 23rd Anniversary of Ordination
God bless you on this milestone of devotion and service.

02 .03 .2017 அன்று இருபத்தி மூன்றாண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு எ.பி.அந்தோனிப்பிள்ளை அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பாங்ஷால் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட திரு.செபஸ்ரி இருதயநாதர்அவர்கள் 05.04.2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
7 வது ஆண்டுகள் குருத்துவ வாழ்வில் நிறைவு காணும் அருட்திரு ஜோன் பற்றிக் அடிகளார் அவர்கள், மென்மேலும் இறைபணியில் சிறந்து விளங்கவும்,இறை ஆசிரோடும், உடல் நலத்தோடும் வாழ வேண்டிய வரங்களை அளித்தருள இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.

Save
Mandaitivu St. Peter's Catholic Community Canada --home
இன்று (29.04.2017) இறைபணியில் பதின்மூன்று ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு இருதயநாதர் பெற்றூஸ் தயாபரன் அடிகளார் அவர்களின் இறைபணி மென்மேலும் விரிவடைந்து தொடரவும், அவருக்கு வேண்டிய ஆன்ம, உள நலன்களை இறைவன் அளித்தருளவும் வேண்டி வாழ்த்துகின்றோம்.
இன்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் நினைவு தினம் - தொழிலாளர் தினம்.
உழைக்கும் தொழிலாளரை போற்றி, அவர்கள் செய்யும் தொழிலை மதித்து, அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவும், அவர்களின் தொழிலை நிறைவாக ஆசீர்வதித்தருளவும் வேண்டுமென்று புனித சூசையப்பரை மன்றாடுவோம்.
புனித சூசையப்பர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

Have a Blessed St.Joseph's Day!

தரணியில் வாழும் அனைத்து அன்னையர்க்கும்
எமது இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

Happy Mother's Day to all Mothers.
Congratulations Dear Rev. Fr. Charles Justin on your 14th Anniversary of Ordination.
God bless you on this milestone of devotion and service.
14 .05 .2017 அன்று 14 ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு சார்ள்ஸ் ஜஸ்டின் அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மண்டைதீவு 1 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நீக்கிலாப்பிள்ளை அன்ரனிதாஸ் அவர்கள் 18.06.2017
வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிராத்திக்கின்றோம்.


அனைத்து கனடா வாழ் மக்களுக்கும் எமது கனடாவின் 150 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Wishing everyone a Happy 150th Canada Day!
பணி வாழ்வினில் பல துறைகளிலும் பணியாற்றி முப்பத்தேழாம் ஆண்டினில் தன் பணியினை ஆரம்பிக்கும் அருட்திரு ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன் அவர்களின் பணி வாழ்வு மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றோம்.
அடிகளாரின் அளப்பரிய சேவையினைத் தொடர வேண்டிய ஆன்ம சரீர வலிமையினை இறைவன் வாரி வழங்க வேண்டுமென்று எம்பதிப் பாதுகாவலனாம் புனித பேதுரு வழியாய் வேண்டுகின்றோம்.
இன்று (30.07.2017) குருத்துவ ஆண்டில் 42 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அ. ப.மார்சலியார் அடிகளார் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும், பணி வாழ்வு சிறப்புறவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.