Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
mandaitivu stp cc email

Toronto














25.08.2020(செவ்வாய்கிழமை)அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த இரு  திருதொண்டர்கள் சூசைதாஸ் ஜே.ஜீவரட்ணம் (அ.ம.தி.),  சந்தியாப்பிள்ளை சந்திரதாஸ் (அ.ம.தி.) மற்றும் திருதொண்டர் கனியூட் பெனெட் சிங்கர் (அ.ம.தி.) ஆகியோர் யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர்  ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால்  குருக்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளார்கள். இவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும், செபங்களும்.
குருத்துவ திருப்பொழிவு நிகழ்வினை நேரலையில்
Priestly Ordination Live 25.08.2020
https://www.youtube.com/channel/UC8MMoF9jsRh6X3MA04V91QQ?fbclid=IwAR3ztOOn5X-vYSsUCkqjfeXNRq31zTkGrbCHrV_wQbT9IaxwgfRP1UOPDK0Daily Readings from the Holy Bible

செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் -திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
Silver Jubilee Celebration of Rev.Sister Mary Verjini Pethuruppillai
Announcements

`
எம் அன்பான இணையத்தள வாசகர்களே! .......
                                                                                                              மேலும்
மரண அறிவித்தல்
யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி. சறோயா நீக்கிலாப்பிள்ளை (சாந்தி) (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர்) அவர்கள் 14.01.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ் மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி) அவர்களின் விண்ணக வாழ்வின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகிய இறைவா உம்மிடம் அழைத்துக்கொண்ட திரேஸ் அந்தோனியாப்பிள்ளை யின் (தவமணி) ஆன்மாவை உமது விண்ணக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
இவரின் இழப்பினால் துயருறும் இவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
இரக்கம் நிறைந்த இறைவா! உமது அளவு கடந்த அன்பினால்
இவருக்கு உமது வான் வீட்டில் இடமளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
இவரின் இழப்பினால் துயருறும் இவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகின்றோம்.
மரண அறிவித்தல்
யாழ் மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்கள் 01.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் ...
மறைந்த திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு
அருட்பணி அந்தோனிப்பிள்ளை அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழா
Congratulations Dear Rev. Fr. Anthonipillai on your 25th Anniversary of Ordination. God bless you on this milestone of devotion service.
குருத்துவப் பணியில் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு அந்தோனி பர்னாந்து அந்தோனிப்பிள்ளை அடிகளார் அவர்கள் தம் இறைபணியினை மென்மேலும் தொடர இறைவன் தன் அருள் வளங்களை வாரி வழங்க வேண்டுமென்று எம்பதிப் பாதுகாவலனாம் புனித பேதுரு வழியாய் வேண்டுகின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி ஜெயசீலியா அடைக்கலமுத்து (பூபதி)
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசீலியா அடைக்கலமுத்து (பூபதி)அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும்.

மரண அறிவித்தல்
யோன் அன்ரனி அன்ரனி டினேஸ்
4 ம் வடடாரம், மண்டைதீவு.
அன்னாரின் இறுதிச்சடங்கு 25.03.2019 அன்று காலை 10:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அன்னாரின் பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர்,நண்பர்கள்

மரண அறிவித்தல் - அமரர் திரு. அந்தோனிமுத்து ஜோசேப்பு
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிமுத்து ஜோசேப்பு அவர்கள் 15.06.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
17.06.2019 பிற்பகல் புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வருபவருமான திரு.தொ. மடுத்தீன் பாக்கியநாதர் (இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு)அவர்கள் இன்று (15.11.2019) தனது 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .
Happy 100th Birthday Dear Packiyanathar! Our prayers and good health with God's abundance of blessings!


14.02.2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று  மண்டைதீவு இறைமீட்பர் சபை (சல்வறோறியன்) அருட்கன்னியர்மடம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால்  திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வினை நேரலையில் பார்வையிட-
https://www.facebook.com/mandaitivu.st.petersparish.5
அர்ப்பண வாழ்வின் முப்பத்திரண்டு ஆண்டுகள் கால இறைபணியினை நிறைவு செய்து, முப்பத்திமூன்றாவதாண்டில் காலடி எடுத்து வைக்கும் அன்புக் குருமணிகளே!
தங்கள் நல்லெண்ணங்கள் யாவும் இனிதே நிறைவுற்று, அர்ப்பண வாழ்விற்கோர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து, மென்மேலும் பல்லாண்டு காலம் இறைபணியாற்றிட வேண்டிய ஆன்ம உடல் வளத்தினை இறைவன் வழங்கிட வேண்டுமென்று வேண்டுகின்றோம்.
செல்லும் இடமெங்கும் சிறந்த சேவையினையாற்றி மனமகிழ அன்புடன் வாழ்த்துகின்றோம்.
                                                         மரண அறிவித்தல்
மண்டைதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஆசீர்வாதம் பத்திநாதர் அவர்கள் (22.07.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா நித்திய இளைப்பாறுதலடைய இறைவனை மன்றாடுகின்றோம்.
31.07.2021 அன்று 41ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்தந்தை கலாநிதி ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன் அடிகளார் இன்னும் பல ஆண்டுகள் நற்பணியாற்ற வேண்டிய உடல், உள, ஆன்ம நலன்களை அளித்தருள வேண்டுமென்று எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனை வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.
Congratulations Dear Rev. Fr. Prof. Dr. Gnanamuththu Victor Pilendran on your 41st Anniversary of Ordination.  May God continue to sustain you with His Grace, Guide and protect you on this journey, And grant you many blessings.



இன்று (30.07.2021) குருத்துவ பணிவாழ்வில்  46 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அ. ப.மார்சலியார் அடிகளார் இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புடன் நற்பணியாற்றவும், நலமுடன் வாழவும்,   எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
Congratulations Dear Rev. Fr. Antony Fernando Marcelliar on your 46th Anniversary of Ordination. May the good Lord keep blessing you abundantly!
                                                   St Peter & St Paul மண்டைதீவு திருநாள் திருப்பலி
                                                                 ஐக்கிய ராட்சியம்.  (London)
அன்பானவர்களே! 08/08/2021 அன்று மதியம் 12:30 மணிக்கு St Elpheges Church, Wallington, SM6 9AY இல் அமைந்துள்ள ஆலயத்தில் செபமாலையுடன் திருநாள் திருப்பலி ஆரம்பமாகும். COVID 19 காரணத்தால் மண்டைதீவு மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். திருநாள் திருப்பலி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறும். அனைத்து மண்டைதீவு மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
செயலாளர்
Anton Suresh Rohanathan
மண்டைதீவு
புனித பேதுருவானவர் ஒன்றியம்
ஐக்கியராட்சியம்.
29.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த அருட்தந்தை கலாநிதி ஞா. விக்ரர் புலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியராக நியமனம் பெற்றமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியுற்று, இவர் பணி மென்மேலும் சிறக்கவும் உடல் உள நலமுடன் வாழவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
25.08.2021 இன்று முதலாம் ஆண்டு குருத்துவ பணியில் நிறைவு காணும் மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கின் மைந்தர்கள் அருட்பணி.  சந்தியாப்பிள்ளை சந்திரதாஸ்,அமதி, அருட்பணி சூசைதாஸ் ஜே.ஜீவரட்ணம், அடிகளார் இருவரும் தமது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள் வளங்களை அளிக்கவும், நலமுடன் இறையாசீர் என்றும் உங்களுடன் தங்கவும் எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனிடம் வேண்டி வாழ்த்துகின்றோம்.